சங்கரன்பந்தலில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம்- எம்.எல்.ஏ. பணியை தொடக்கி வைத்தார்
- வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
- ரூ.2 கோடியே 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
இதனால் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த பல கிராமமக்கள் புதிய பாலம் கட்டிதர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கே நபார்டு வங்கி நிதியுதவியில் ரூ.2 கோடியே 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், அமுர்த.விஜயகுமார், ஒப்பந்ததாரர் பழனிவேல், டெல்டா பாசனதாரர் சங்க தலைவர் கோபி கணேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பகவதி, லெனின் மேசாக் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.