நெட்டூர் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்-நாளை மறுநாள் திறப்பு விழா
- நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார சுகாதார பொது அலகு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் வட்டார சுகாதார பொது அலகு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.
அமைச்சர் திறப்பு
திறப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். அமைச்சர் வருகையை யொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தை சுற்றி பார்த்தார்.
அப்போது அவருடன் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணிதுணை அமைப்பாளர் மணி கண்டன், ஒன்றிய கவுன்சி லர்கள் சேக் முகமது, சுபாஷ் சந்திரபோஸ், தொழில திபர் மாரித்துரை, நெட்டூர் வட்டார சுகாதார மருத்துவர் டாக்டர் ஆறுமுகம், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் கங்காதரன், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், கிளைச் செயலாளர் கணேசன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.