உள்ளூர் செய்திகள்

அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் உடன்குடி வழியாக கன்னியாகுமரி, வேளாங்கண்ணிக்கு புதிய அரசு பஸ் இயக்கம்

Published On 2022-08-03 08:23 GMT   |   Update On 2022-08-03 08:23 GMT
  • அமைச்சரின் முயற்சியினால் கன்னியாகுமரியில் உடன்குடி வழியாக வேளாங்கண்ணி வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
  • யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி கொடியசைத்து பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

உடன்குடி:

உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் மற்றும் பொது மக்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் உடன்குடியில்இருந்து வேளாங்கண்ணிக்கு அரசுபஸ் இயக்க வேண்டும் என கோரிக்கைமனு கொடுத்தனர்.

அமைச்சரின் முயற்சியினால் கன்னியாகுமரியில் இருந்து தினசரி மாலை 3.30 மணிக்கு இந்தஅரசு விரைவு பஸ் தடம் எண் 561 இ புறப்பட்டு உவரி, மணப்பாடு வழியாக உடன்குடிக்கு மாலை 6.30 மணிக்கு வரும் பின்பு இங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக வேளாங்கண்ணி வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த பஸ் இயக்க தொடக்க விழா உடன்குடி பஸ் நிலையத்தில் நடந்தது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், பேரூர் தி.மு.க., செயலாளருமான சந்தையடியூர் மால்ராஜேஷ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகா விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருச்செந்தூர் ஜாண்பால், மாவட்ட சிறுபான்மை அணி துணை அ மைப்பாளர் சீராசுதீன், மாவட்ட காங்கிரஸ்முன்னாள் பொருளாளர் நடராஜன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், உடன்குடி பேரூர் அவைத் தலைவர் ஷேக் முகமது, முன்னாள் கவுன்சிலர் சலீம், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News