வடமதுரை அருகே புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்படாததால் வெயிலில் தவிக்கும் மாணவர்கள்
- பணிகள் முடிந்து 4 மாதங்களாகியும் பள்ளி கட்டிடம் திறக்கப்பட வில்லை.
- பள்ளி மாணவர்கள் நாடக மேடையில் அமர்ந்து படிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புதுக்களராம்பட்டியில் ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது.
பணிகள் முடிந்து 4 மாதங்களாகியும் பள்ளி கட்டிடம் திறக்கப்பட வில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் வெயிலில் நாடக மேடையில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு பெரும் வேதனை அளித்து வருகிறது.
இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், கடும் கோடை வெயிலில் பெரியவர்களே வெளியில் வர அச்சப்படும் நிலையில் பள்ளி மாணவர்கள் நாடக மேடையில் அமர்ந்து படிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு பள்ளியை திறக்க வேண்டும் என்றனர். இதேபோல் தங்கம்மாபட்டி அங்க ன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாத ங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே வடமதுரை பகுதிகளில் புதிய கட்டிடங்களை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.