உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் நகராட்சியில் குப்பைகளை அகற்ற புதிய வாகனங்கள்
- திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சேகரிக்க 7 பிக்கப் வாக னங்கள் வரவழைக்கப்ப ட்டது.
- ஒவ்வொரு வார்டுகளிலும், தெருக்களிலும் உடனு க்குடன் குப்பைகளை அகற்றும் பணி முழுமையாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொடைக்கானல் :
கொடைக்கானல் நகராட்சியில் தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் 15-வது மத்திய குழு நிதி திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சேகரிக்க 7 பிக்கப் வாக னங்கள் வரவழைக்கப்ப ட்டது.
இந்த வாகனங்களின் செயல்பாட்டு பணியை நகர்மன்றத் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், பொறியாளர் முத்துக்குமார்,
நகர்நல அலுவலர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. குப்பைகளை அகற்றும் வாகனங்களின் எண்ணி க்கை அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு வார்டுகளிலும், தெருக்களிலும் உடனு க்குடன் குப்பைகளை அகற்றும் பணி முழுமையாக நடைபெறும் என நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தெரிவித்தார்.