உள்ளூர் செய்திகள்
மறைமலைநகர் நகராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்
- பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம்.
- தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வண்டலூர்:
மறைமலை நகர் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது, இதைத தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் நகராட்சியால் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்ற வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறும்போது, பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம். டெங்கு கொசு உற்பத்தியாகும் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்களுக்கு அபராத விதிக்கப்டுகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.