உள்ளூர் செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சிறப்பு ரெயிலில் சென்னை வருகை

Published On 2023-06-03 23:23 GMT   |   Update On 2023-06-03 23:23 GMT
  • ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 131 பயணிகள் இன்று அதிகாலை சென்னை வந்தனர்.
  • அவர்களை மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

சென்னை:

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த கோர 288 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் ரெயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒடிசாவில் இருந்து 131 பயணிகள் சிறப்பு ரெயிலில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் ரயில்வே துறை மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பயணிகளை அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நின்றன.

Tags:    

Similar News