அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் முதன்மைச்செயலாளர் பேச்சு
- தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அரசு முதன்மைச் செயலாளர், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது
தேனி:
தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட திருமலாபுரம் ஊராட்சிப்பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திக், மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் கல்வி மையத்திற்கான கட்டுமானப்பணி, ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட திருமலாபுரம் ஊராட்சிப்பகுதியில்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணி, ரூ.7.97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரணி சீரமைப்பு பணி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ரூ.5.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர்களுக்கான கழிப்பறை கட்டும்ப்பணி, ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரணி சீரமைப்பு பணி,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணைகுட்டை அமைக்கும் பணி, வரப்புகளில் மரகன்றுகள் நடவு செய்யும் பணி, ரூ.2.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு பணி, ரூ.2.32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு ஆகியவற்ைற ஆய்வு செய்து தெரிவித்தாவது,
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகளை ஒவ்வொரு துறையினரும் மற்ற துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து ஒருமித்து செயல்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் பணியாற்றிட வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.