உள்ளூர் செய்திகள்

குடிமை வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

பாவூர்சத்திரம் பகுதியில் அரிசி ஆலைகளில் அதிகாரிகள் 'திடீர்' ஆய்வு

Published On 2023-02-28 08:37 GMT   |   Update On 2023-02-28 08:37 GMT
  • பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள நெல் அரவை மில்களில் குடிமை வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
  • விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? என கேட்டறிந்தனர்.

தென்காசி:

மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா உத்தரவின்பேரில் நெல்லை சரக குடிமை வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டி.எஸ்.பி. முத்துக்குமார், தென்காசி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள நெல் அரவை மில் மற்றும் புளியரை, கற்குடி, ஆகிய இடங்களில் உள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் குளறுபடிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News