சேலத்தில் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகளை அதிகாரி ஆய்வு
- சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
- இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
சேலம்:
சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்கா–ணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சேலம் இரும்பாலை சாலையில் புதுரோடு சந்திப்பை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்படவுள்ள பணிக்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற வேண்டியுள்ளது.
இதேபோல் சேலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திலுள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக அவ்வப்பொழுது மரங்கள் அகற்றப்படுகிறது. அவ்வாறுஅகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக 10 மடங்கு மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரங்களில் நடப்பட்டு வருகிறது.
இதற்காக, சேலம் இரும்பாலை சாலையில் சோளம்பள்ளம் பகுதி–யில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நாற்றங்காலை சென்னை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் அவரும் மரக்கன்றுகளை நட்டார்.
ஆய்வின்போது கண்கா–ணிப்புப் பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் துரை, உதவிக்கோட்டப் பொறியா–ளர்கள் சந்தோஷ்குமார், பிரபாகரன் பற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.