உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 1.50 லட்சம் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை அதிகாரிகள் தகவல்

Published On 2022-08-25 10:13 GMT   |   Update On 2022-08-25 10:13 GMT
  • நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
  • தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.

சேலம்:

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சேலம் கோட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.

சீருடை

நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்பதில்லை. மேலும், மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டுக்காக இலவச பஸ் பாஸ் பயண அட்டை மற்றும் 50 சதவீ தம் கட்டணம் சலுகை பயன்படுத்தும் அட்டை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மாணவர்க ளின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் பள்ளிகளிடம் இருந்து, அந்தந்த பணிமனைகளில் கேட்டு பெறப்பட்டுள்ளது.

2.75 லட்சம் பஸ் பாஸ்கள்

அதன்படி, சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் பயணிக்கக்கூடிய அட்டையும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News