உள்ளூர் செய்திகள்

சிவகிரி கண்மாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-11-22 08:21 GMT   |   Update On 2023-11-22 08:21 GMT
  • வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
  • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

சிவகிரி:

சிவகிரி தாலுகா விஸ்வநாதபேரி கிராமம் பாகம் 1-ஐ சேர்ந்த வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இக்கண்மாய் மூலம் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வெளியே செல்லக்கூடிய கலிங்கல் மடை அருகே 5 அடி ஆழத்தில் மண் திருடப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், ராஜபாளையம் மேல்வைப்பாறு நீர் நிலை கோட்டம் உதவி பொறியாளர், காவல் துறையினர் ஆகியோருக்கு, வழிவழி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பாக சங்கத் தலைவர் க.சிவசுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. வெங்க டேசன், பொதுப்பணித்துறை சார்பில் இளநிலை பொறியாளர் கண்ணன், வருவாய் துறை சார்பில் சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அது சம்பந்தமான அறிக்கையை தங்களுடைய மேலதிகாரி களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News