கோவையில் தீ விபத்தில் முதியவர் காயம்
- ஜானியும், அவரது மனைவியும் உணவு சமைத்து கொண்டு இருந்தனர்.
- முதியவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை,
ேகாவை கணபதி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் ஜானி (வயது 69). இவரது மனைவி லில்லி மேரி. இவர்களது மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று அதிகாலை ஜானியும், அவரது மனைவியும் உணவு சமைத்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் தீர்ந்து போனது. இதனையடுத்து வேறு ஒரு சிலிண்டரை மாற்றி சமைத்தனர். பின்னர் லில்லி மேரியும், அவரது மகனும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஜானி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் சமையல் அறையில் இருந்து கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.இதில் ஜானியின் உடலில் தீ பிடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.