ஊட்டி நகர தி.மு.க சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
- கலைஞர் ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகர தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஊட்டி பிங்கர்போஸ்ட் திரேசா பள்ளி வளாகத்தில் நடந்தது. நகரசெயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக், துணை செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி எம்.பி. ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ப்ரீசர் பாக்ஸ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-
தமிழக மக்களுக்கு கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவரது ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
மேலும் மருத்துவ காப்பீடு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றினார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். அவரது வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எனவே நாம் அவருக்கு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அணிகளின் அமைப்பாளர்கள் எல்க்ஹில் ரவி, தீபக், ஊட்டி நகர துணை செயலாளர் கார்ட்ன் கிருஷ்ணர், அவைத்தலைவர் ஜெயகோபி, கவுன்சிலர்கள் தம்பிஇஸ்மாயில், கீதா, வனிதா, செல்வராஜ், மேரிபுளோரினா, அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.