வணிகவியல் துறை சார்பாகமொரப்பூர் கொங்கு கல்லூரியில் கருத்தரங்கு
- இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
- 25 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மற்றும் பண்னாட்டு வாணிகத்தின் புதுமையான யுக்திகள் என்ற தலைப்பில் பண்னாட்டு தேசிய கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகனராசு தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பொன் வரதராஜன், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் குணசேகரன் வரவேற்று பேசினார். பண்னாட்டு தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கிழக்கு ஆப்பிரிக்கா எத்தியோபியாவில் உள்ள சமரா யுனிவர்சிட்டியில் அக்கவுண்டிங் மற்றும் பைனான்சிஸ் துறை பேராசிரியர் சின்னையா அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.இதில் 25 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக் கருத்தரங்கில் கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் ராமு, வெற்றி செல்வன், குணசீலன், நாகராஜன், கணேசன், தமிழரசு, பரமசிவம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.