குமாரபாளையம் நகராட்சி சார்பில் கோம்புப்பள்ளம் தூர் வாரும் பணி தீவிரம்
- குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள கோம்புப்பள்ளம் தூய்மை பணி, ஜே.கே.கே. சாலை, சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டது. அப்போது கமிஷனர் விஜயகுமார் பேசுகையில், பொதுமக்கள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தார் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், தெருக்களில், கோம்புப் பள்ளத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது. தூய்மையான நகராட்சியாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்றார்.
குப்பைகள் கொட்டக்கூ டாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பல இடங்களில் போர்டுகள் வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் 50 மரக்கன்று கள் நடப்பட்டன இதில்
பொறியாளர் ராஜேந்தி ரன், சுகாதார அலுவ லர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வ ராஜ், சந்தானகிருஷ்ணன், கவுன்சிலர் நந்தினிதேவி, கதிரவன் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.