ஆண்டிபாளையம் குளத்தின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.
- பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி எல்லையில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் மாநகராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதன் அருகே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, வெற்றி அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில், தூய்மை காக்கும் உறுதிமொழியேற்பு நடந்தது.மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர். மண்டல குழு தலைவர், கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குளத்தின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி சுத்தம் செய்யும் பணி துவங்கியது.நீண்ட நாள் திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை மேயர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சீரமைப்பு பணிகள் செய்து பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.