உள்ளூர் செய்திகள் (District)

பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் கலர் கோலப்பொடிகள் விற்பனை மும்முரம்

Published On 2022-12-16 09:38 GMT   |   Update On 2022-12-16 09:38 GMT
  • சேலம் குகை, மாரியம்மன் கோவில் மெயின் ரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 25- ற்கும் மேற்பட்ட கலர் கோலப்பொடிகள் விற்கும் கடைகள் உள்ளன.  அதுபோல் செவ்வாய்ப்பேட்டை, கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் கோல பொடிகள் விற்கப்படுகிறது.
  • பொங்கல் பண்டிகை யையொட்டி வீடுகளுக்கு வெள்ளை அடிக்கும் பணியிலும் மக்கள் ஈடுபட தொடங்கி உள்ளனர். இதனால் சுண்ணாம்பு, பெயிண்டு உள்ளிட்ட வற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

அன்னதானப்பட்டி:

மார்கழி மாதம் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, தொடங்கி பொங்கல் பண்டிகை வரை பெண்கள் தங்கள் எண்ணங்களை பெரிய பெரிய வண்ண கோலங்களாக , இட்டு வீடு வாசலை அலங்கரிப்பது வழக்கம்.

சேலம் நெத்திமேடு, அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 20- க்கும் மேற்பட்ட கோலப் பொடிகள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. கடைக்காரர்கள் அங்கிருந்து கலர் கோலமாவுகளை வாங்கி வந்து தங்களது இடங்களில் விற்பனை செய்வர். 

அந்த வகையில் சேலம் குகை, மாரியம்மன் கோவில் மெயின் ரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 25- ற்கும் மேற்பட்ட கலர் கோலப்பொடிகள் விற்கும் கடைகள் உள்ளன.  அதுபோல் செவ்வாய்ப்பேட்டை, கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் கோல பொடிகள் விற்கப்படுகிறது.

இது குறித்து கோலப்பொடி கடையினர் கூறுகையில், கலர் கோலப்பொடிகள் அளவைப் பொறுத்து ஒரு பாக்கெட் ரூ.3, ரூ.5, ரூ.7, ரூ.10 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகிறது. வெள்ளை கோலமாவு ஒரு பாக்கெட் ரூ.100- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் சமயம் என்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கோலப்பொடிகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் கோலப்பொடிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரை விற்பனை விறுவிறுப்பாக இருக்கும்". இவ்வாறு அவர்கள் கூறினர். 

பொங்கல் பண்டிகை யையொட்டி வீடுகளுக்கு வெள்ளை அடிக்கும் பணியிலும் மக்கள் ஈடுபட

தொடங்கி உள்ளனர். இதனால் சுண்ணாம்பு, பெயிண்டு உள்ளிட்ட வற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News