உள்ளூர் செய்திகள்

ஒரு குழந்தைக்கு நாக்கில் தங்க ஊசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதி ஆசீர்வாதம் செய்தனர்.

விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

Published On 2022-10-05 10:08 GMT   |   Update On 2022-10-05 10:08 GMT
  • குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.
  • 205 குழந்தைகளுக்கு மேல் கலந்து கொண்டனர்.

தருமபுரி, 

தருமபுரி கேரள சமாஜத்தின் 21 -வது ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் விழா இன்று புதன்கிழமை விஜயதசமி அன்று ஹோட்டல் ஸ்ரீ ராமா சுந்தர மகால் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை கேரள சமாஜத்தின் தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் துணைத் தலைவர் நாராயணசாமி பொருளாளர் சத்திய நாராயணன் முன்னிலையில் விழா தொடங்கியது. இதில் சமாஜ செயலாளர் ஹரிகுமார், வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் கேரளா மாநிலம் கண்ணூர் விஷ்ணு நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதி ஆசீர்வாதம் செய்த பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.

இவ்விழாவில் 205 குழந்தைகளுக்கு மேல் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சிலேட்டு, பென்சில், பல்பம், ரப்பர், ஷார்பனர், சிறிய வேட்டி, மற்றும் ஏபிசிடி புத்தகம் ஆகியவை சடங்கில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News