வைகாசி அமாவாசையை ஒட்டி மாதேஸ்வரன் மலைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்
- சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது.
- பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு அமாவாசை நாட்களும் சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உள்பட பல திரு விழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும். இதை தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு அமாவாசை நாட்களும் சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை வைகாசி மாத அமாவாசை வருகிறது.
சிறப்பு பஸ்கள்
இதையொட்டி சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர், தர்மபுரி ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நட வடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.