சாரதா கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்
- விழாவில் திருவாதிரைக்களி நடனம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். யதீஸ்வரி முகுந்த பிரியா அம்பா சிறப்புரை வழங்கினார். குழுப்பாடல் (மலையாளம்), திருவாதிரைக்களி நடனம், கவிதை வாசித்தல் (மலையாளம்) ஆகிய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் பேரவை தலைவி தமயந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு பார்வதி தேவி ஏற்பாடு செய்திருந்தார்.
சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் உடற்கல்வி, விளையாட்டு அறிவியல் மற்றும் யோகா துறையால் கொண்டாடப்பட்டது. கோ-கோ, டேபிள் டென்னிஸ், கயிறு தாண்டுதல், செஸ், வாக் ரோஸ், பந்தய போட்டிகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி அம்பா மற்றும் முதல்வர் பரிசுகளை வழங்கினர். இப்போட்டியில் மொத்தம் 147 மாணவர்களும், 29 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.