தச்சநல்லூர் அருகே நம்மாழ்வார் சிலை திறப்பு
- தச்சநல்லூர் சிதம்பராநகர் நல்லமுத்து இயற்கை வேளாண் மையத்தில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
- ஈஷா யோகா மையம் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது
நெல்லை:
தச்சநல்லூர் சிதம்பரா நகர் நல்லமுத்து இயற்கை வேளாண் மையத்தில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மக்கள் மருத்துவர் ராமகுரு தலைமை தாங்கினார். நம்மாழ்வார் சிலையை ஓவியர் சந்துரு திறந்து வைத்தார். நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்கள் சுகா, ராமனுஜம், காந்தி கிராம பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் டாக்டர் பிரேம சந்திரன், ரமேஷ் ராஜா, சேசுராஜ், இயற்கை விவசாய சங்கம் சுப்பிரமணியம், நடராஜன், உஷாராமன், உழவர் கூட்டுப்பண்ணை கிருசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஈஷா யோகா மையம் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இயற்கை விவசாயம் செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.