உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தமிழ்அறிஞர்களுக்கு அரசு உதவித்தொகை பெற வாய்ப்பு வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-03-09 04:57 GMT   |   Update On 2023-03-09 04:57 GMT
  • தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.

தேனி:

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2022-2023ஆம்ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் நபர்கள் கடந்த ஜனவரி 1, 2022-அன்று 58 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் பெறப்பட்ட வருமானச் சான்று , தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோஇலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500 ம் , மருத்துவப்படி ரூ.500-ம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.நேரடியாக சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே, மாவட்டத்தில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News