உள்ளூர் செய்திகள் (District)

நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம்

Published On 2023-10-22 09:52 GMT   |   Update On 2023-10-22 09:52 GMT
  • தருமபுரி மாவட்டத்தில் நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
  • திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டார்.

ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவருக்கு 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று கடிதம் அனுப்புவதற்காக கழக இளைஞர் அணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு மாபெரும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி மாவட்ட அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், மாணவர் அணி அமைப்பாளர் பெரியண்ணன் ,மருத்துவர் அணி அமைப்பாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு நீட் விலக்கு நம் இலக்கு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.அதனையடுத்து மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

முன்னதாக நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் ஏன் நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்தும் காணொலி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியதை மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு கேட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர் வைகுந்தம், பெரியண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மற்றும் திமுக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News