உள்ளூர் செய்திகள்

பெரும்பாலை அரசு பள்ளியில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி

Published On 2023-09-08 09:51 GMT   |   Update On 2023-09-08 09:51 GMT
  • பெரும்பாலை அரசு பள்ளியில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் மாணவிகள் இயற்கை உணவு உள்பட அடுப்பில்லாமல் செய்த சுவையான சமையல் உணவு வகைகளை பார்வைக்காக வைக்கப்பட்–டிருந்தது.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

திட்ட பணிகள் மேற்பார்–வையாளர் விஜயலட்சுமி, தொகுதி மேற்பார்வை யாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் 49 மாணவி கள் இயற்கை உணவு, சிறுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்றவற்றை கொண்டு அடுப்பில்லாமல் செய்த சுவையான சமையல் உணவு வகைகளை பார்வைக்காக வைக்கப்பட்–டிருந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவி–களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முகுந்த மாதவன் அனை–வருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News