உள்ளூர் செய்திகள்

பள்ளி தாளாளா் ராம்மோகன் தலைமையில் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓசோன் தினவிழா நடைபெற்றபோது எடுத்தபடம்.


செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில் ஓசோன் தினவிழா

Published On 2022-09-18 06:34 GMT   |   Update On 2022-09-18 06:34 GMT
  • செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது.
  • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓசோன் படல பாதுகாப்பு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, ரங்கோலி போட்டிகள் நடந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளா் ராம்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வா் ராணிராம்மோகன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியா் சம்ஸியா வரவேற்று பேசினார்.

அதனைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓசோன் படல பாதுகாப்பு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, ரங்கோலி போட்டிகள் நடந்தது. ஆசிரியர்களுக்கு பயர்லெஸ் குக்கிங் என்ற தலைப்பில் இயற்கை முறையில் சமையல் போட்டி நடந்தது. பேச்சு போட்டியில் 7-ம் வகுப்பு மாணவி பாலதண்யாவும், ஓவியப்போட்டியில் 9-ம் வகுப்பு மாணவா் ரபீக், ரங்கோலி போட்டியில் 10-ம் வகுப்பு மாணவி சமீரா, சண்முகப்பிரியா குழு முதல் பரிசுகளை பெற்றனா். சமையல் போட்டியில் ஆசிரியை செல்வக்குமாரி முதல் பரிசு பெற்றார்.

ஆசிரியா் முருகன் சிறப்பு பரிசு பெற்றார். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியா்களுக்கு பள்ளி தாளாளா் ராம்மோகன் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். அதனைத்தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியா், ஆசிரியர்கள் மூலிகை மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

விழாவில் பள்ளி தலைமைஆசிரியா் கார்த்திக் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பள்ளி சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளா் முருகன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனா். ஆசிரியை ஜான்சி நன்றி கூறினார்.


Tags:    

Similar News