ஏரி உபரி நீரால் அழுகிய நெற்பயிர்கள்: கலெக்டர்அலுவலகத்தில் விவசாயிகள் மனு
- கீழ் சவுளுப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.
- அழுகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனர்,
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேவுள்ள பந்தாரஹள்ளி ஏரி சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியிருக்கிறது.ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறக்கூடிய ஏரி கோடி பகுதி தடுப்பணை சுவரின் உயரத்தினை ஒன்றரை அடி அளவிற்கு சமீபத்தில் உயர்த்தி கட்டியதால் ஏரியில் கூடுதலான அளவிற்கு தண்ணீர் நிரம்பிதாழ்வான பகுதியாக உள்ள கீழ் சவுளுப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.
தண்ணீர் வெளியேற வடிகால் வசதி இல்லாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், அவரை, உள்ளிட்ட விளை பயிர்கள் தண்ணீரில் அழுகியுள்ளது. இந்நிலையில் அழுகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனர், இது தொடர்பாக காரிமங்கலம்
பி.டி.ஓ. அலுவலகம், காரிமங்கலம் வட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்திருப்பதாகவும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.