போலீசார் அலைக்கழிப்பால் பெயிண்டர் தற்கொலை - மனைவி பரபரப்பு புகார்
- பெயிண்டர் மீது சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் அலைக்கழிப்பதால் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி கோர்ட்டு அரிசி ஆலை தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று சீலையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் மீது கணேசன் மோதியதாக தெரிகிறது. இதனால் முதியவர் காயமடைந்தார்.
இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த கணேசன் தன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த விபரத்தை தனக்கு தெரிவிக்காமலும், இரு சக்கர வாகனத்தை திருப்பித்தராமலும் இருந்த நிலை குறித்து தனது மனை வியிடம் கூறி வேதனையடை ந்தார். நேற்று முன்தினம் தனது வீட்டி லேயே கணேசன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
தேனி அரசு மருத்துவக்க ல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்ட கணே சன் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இந்நிலையில் போலீசார் அலைக்கழிப்பு செய்த தால்தான் தனது கணவர் இறந்து விட்டார் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கலெக்டர் அலுவலகத்தில் கணேசனின் மனைவி சின்னப்பொன்னு மற்றும் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.