உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், கழிவறை முன்பு புதர் மண்டி கிடப்பதை படத்தில் காணலாம்.

குப்பை காடாக மாறிய பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம்

Published On 2023-10-08 09:56 GMT   |   Update On 2023-10-08 09:56 GMT
  • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்து செல்கின்ற னர்.
  • மழை காலங்களில் பாம்பு, விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் சுற்று சுவர் மற்றும் பல்வேறு வகையான மரங்களுடன் இயற்கையாக அமைந் துள்ளது.

இங்கு மாரண்டஹள்ளி, புலிக்கரை, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட 4 வருவாய் பிர்காகளிலிருந்து தினந்தோறும் ஆதார் அட்டை, பட்டா பெறுதல், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்து செல்கின்ற னர்.

வட்டாட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் குப்பைகள், முட்புதர்கள், புல் செடிகள் மரங்கள் இருக்கும் பகுதியில் அடர்ந்த சீமை கருவேலம் மரங்கள் உள்ளிட்டவை இருப்பதால் மழை காலங்களில் பாம்பு, விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் வந்து செல்கின்றனர்,

மேலும் மாற்றுத்தி றனாளிகள் பொதுமக்கள் பொதுக் கழிவறை சுகாதாரமற்றிருப்பதாலும் புதர் மண்டி இருப்பதாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு முட்புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News