உள்ளூர் செய்திகள்

கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான், வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விஸ்வேஸ்வரர், பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பரமத்தி வேலூர் பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2022-09-09 10:24 GMT   |   Update On 2022-09-09 10:24 GMT
  • பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்  நடைபெற்றது.
  • அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தானம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .

பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் ,அங்காள பரமேஸ்வரி அம்மன் ,மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,450 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில்,

பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபி ஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News