உள்ளூர் செய்திகள்

பரிமள ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

பரிமள ரெங்கநாதர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2022-11-17 08:25 GMT   |   Update On 2022-11-17 08:25 GMT
  • திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய கோவில்.
  • காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஸ்தலமாகவும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவதாகவும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்று, பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இந்நிலையில் கோயிலில் தேரோட்டம் நான்கு வீதிகளில் வலம் வந்தது.

இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரெங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி சன்னதியை வந்தடைந்தது.

பின்னர் மதியம் 1:30 மணி அளவில் நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், நிர்வாக அலுவலர் ரம்மியா, கோயில் அலுவலர் விக்னேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொன் சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News