உளுந்தூர்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் விழாவிற்கான ஏற்பாடு செய்து வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளரும், நகர மன்ற தலைவருமான வைத்தியநாதன், ஒன்றிய கழக மேற்கு செயலாளரும், உளுந்தூர்பேட்டை யூனியன் சேர்மன் ராஜவேல், முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர மன்ற தலைவருமான திருநாவுக்கரசு, திருநாவலூர் யூனியன் சேர்மன் சாந்தி இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பங்கேற்றவர்களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர். இதில் 5716 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 1143 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் ஷ்ர்வன்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிகண்ணன் ஆகியோர் சேர்ந்து வழங்கி பேசினார்கள்.
இதில் வேலை வாய்ப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் லதா, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரி முரளிதரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ், பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ், துணைத்தலைவர் அம்பிகாபதி, அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, நகர மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் தொல்காப்பியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், உறுப்பினர்கள் கலா, மதியழகன், குமரவேல், செல்வகுமார், ரமேஷ்பாபு, சந்திரகுமாரி, நிர்வாகிகள் ஐஸ்வர்யா, பாலாஜி, மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.