உள்ளூர் செய்திகள்

உடன்குடி திசையன்விளை ரோட்டில் ஒரு பெண் பதநீர் விற்பனை செய்த காட்சி.


உடன்குடி சுற்றுப்புற கிராமங்களில் பதநீர் உற்பத்தி தொடங்கியது

Published On 2023-02-25 07:15 GMT   |   Update On 2023-02-25 07:15 GMT
  • உடன்குடி சுற்றுப்புற பகுதிகிராமங்களில் பனைமரத்தில் பதநீர் எடுக்கும் பணி தொடங்கியது.
  • ஒரு லிட்டர் பதநீர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடன்குடி:

உடன்குடிசுற்றுப்புற பகுதிகிராமங்களில் பனைமரத்தில் பதநீர் எடுக்கும் பணி தொடங்கியது. கருப்பட்டி உற்பத்தி விரைவில் தொடங்கும் என தெரிவித்தனர். உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உருவாகும் கருப்பட்டி உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு ஊர் ஊராக சென்று விற்பனை ஆகும்.

ஒவ்ேவாறு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என 5 மாதங்கள் நடைபெறும். இந்த ஆண்டு இப்பகுதியில் மழைமிக மிக குறைவாக பெய்ததால் பனைமரத்தில் ஏறி இறங்கி, பதநீர் எடுக்கும் பணி முன்னதாக தொடங்கி, தற்போது பதநீர் வந்துவிட்டது. குறைவான பதநீர் இருப்பதால் இதைகாய்ச்ச முடியாது என்பதற்காக பதநீராகவே விற்பனை செய்கின்றனர்,

ஒரு லிட்டர் பதநீர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உடன்குடி பகுதியில் பல இடங்களில் பதனீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. இது பற்றிபதநீர் விற்பனை செய்த ஒரு பெண் கூறியதாவது:-

தற்போது குறைவாகவே பதநீர் கிடைப்பதால் அதை விற்பனை செய்கிறோம், கூடுதலாக பதநீர் வரும்போது கருப்பட்டி தயார் செய்து விற்பனை செய்வோம். எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் கருப்பட்டியை விரைவில் உற்பத்தி செய்வோம் என்று கூறினார்.

Tags:    

Similar News