தார்பாய் போர்த்தாமல் இயக்கிய மணல் லாரிகளுக்கு அபராதம் விதிப்பு
- காவிரி ஆற்றுப்பாலம் போலீஸ் சோதனை சாவடி அருகே நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
- மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் மீது சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு, 5 லாரிகளுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காவிரி ஆற்றுப்பாலம் போலீஸ் சோதனை சாவடி அருகே நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் திடீர் வாகன சோ தனை மேற்கொண்டனர்.
அப்போது, தார்பாய் போடாமல் மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் மீது சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு, 5 லாரிகளுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த மணல் லாரிகள், தார் பாய் போர்த்தப்பட்டு எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவ்வழி யாக தார் பாய் போடாமலும், வாகனம் இயக்குவதற்கான அனுமதி சீட்டு இல்லாமலும் வந்த மற்றொரு லாரிக்கு, அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், லாரியை பறிமுதல் செய்த னர். இதேபோல், அவ்வழி யாக வந்த கார் ஒன்றை சோ தனை மேற்கொண்டதில், சொந்த காரை வாடகைக்கு இயக்கியது தெரியவந்தது.
அந்த காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.
இதனிடையே, மணல் லாரிகள் தார் பாய் போடா மல் இயக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.