உள்ளூர் செய்திகள்

மருத்துவ சேவையினை பாராட்டி மருத்துவர் கனிமொழிக்கு கலெக்டர் சாந்தி நற்சான்றிதழை வழங்கினார்.

சுதந்திர தின விழாவில் மருத்துவ சேவையை பாராட்டி பென்னாகரம் டாக்டருக்கு நற்சான்றிதழ்

Published On 2023-08-16 09:49 GMT   |   Update On 2023-08-16 09:49 GMT
  • 40 பேருக்கு அவரது சேவையினை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
  • மருத்துவர் கனிமொழிக்கு மருத்துவ சேவையினை பாராட்டி கலெக்டர் சாந்தி நற்சான்றிதழை வழங்கினார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த விழாவில் தருமபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை சார்பில் சிறப்பாக மருத்துவ சேவை செய்த மருத்து வர்கள்,செவிலியர்கள், மருந்தாளுநர்கள், எக்ஸ்ரே டெக்னீசியன்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், முதல் -அமைச்சரின் விரிவான பாதுகாப்பு திட்ட மருத்துவர்கள் என மொத்தம் 40 பேருக்கு அவரது சேவையினை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

அந்த வகையில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கேடயமும், அதே மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் மருத்துவர் கனிமொழிக்கு மருத்துவ சேவையினை பாராட்டி கலெக்டர் சாந்தி நற்சான்றிதழை வழங்கினார்.

Tags:    

Similar News