உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி 38-வது வார்டில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் அவதி

Published On 2023-11-27 09:17 GMT   |   Update On 2023-11-27 09:17 GMT
  • பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது.
  • கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி 38-வது வார்டு பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் ராமலட்சுமி, சின்னத்துரை, ஜெபமணி, நடராஜன், கந்தசாமி, நாராயணன், தங்கம், கோலப்பன், சுந்தரி, மகாராஜன் ஆகியோர் மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி தெருக்களில் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது. சீனிவாசன் நகர் பகுதியில் நாங்குநேரி சர்வீஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ஆதித்தனார் 1-வது தெருவில் கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய்வாய்ப்படும் நிலை உள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியை பார்வையிட்டு தாழ்வாக இருக்கும் கழிவு நீர் ஓடையை உயர்த்தி அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாச நகர் தனியார் மஹால் முதல் கோகுலம் நகர் அடுத்ததாக அமைந்துள்ள குளம் வரை ஓடையை நீட்டிப்பு செய்து சரியான முறையில் கழிவுநீர் ஓடை அமைத்து தரவேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News