உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுப்பட்ட போலீசாரை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அருகே மழைநீர் கால்வாய் சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2023-09-20 07:18 GMT   |   Update On 2023-09-20 07:18 GMT
  • மேல்மலையனூர் அருகே மழைநீர் கால்வாய் சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
  • அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விழுப்புரம்:

மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தில் கீழண்டை தெரு உள்ளது. இப்பகுதியில் மழை பெய்தால் கால்வாய்மூலம் தண்ணீர் வெளியேறும்படி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு ஒரு பாலம் உயர்த்திக் கட்டியதாலும் சிலரது ஆக்கிரமிப்பாலும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது. அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேவனூர-கெங்கபுரம் சாலையில் இன்று காலை 10.15 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மழைநீர் வீதியில் தேங்காதவாறு இருந்தது. தற்போது கீழண்டை தெரு ஆரம்பத்தில் ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கவில்லை இதனால் கடந்த சில நாட்களாக பெய்யும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது.மேலும் வீட்டின் உட்புறம் தண்ணீர் தேங்கியதால் இரவு முழுவதும் தூங்காமல் வீட்டில் தேங்கிய நீரை வெளியேற்றி வருகிறோம். மழைநீர் செல்லும் இடத்தில் சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாய் அமைக்க முடியாத நிலை உள்ளது. இதை நாங்கள்அதிகாரிகளிடம் முறையிட்டும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News