மீனவ கிராமத்திற்குள் புகுந்த கடல்நீரால் மக்கள் அவதி
- கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை கடல்நீர் சூழ்ந்தது.
- படகில் உள்ள மீன்பிடி உபகரண பொருட்களை நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி மீனவர் காலனி பகுதியிலிருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடி தொழிலுக்கு மீனவர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களாக நிலவி வந்த புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.இந்நிலையில் திடீரென கடல் சீற்றம் அதிகரித்து கடல் நீர் மீனவ கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளது.
மேலும் கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை சுற்றியும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.
மீனவர்கள் ஏற்கனவே நங்கூரமிட்டு கட்டப்பட்ட படங்களை மேலும் தற்பொழுது கடல் நீரில் அடித்து செல்லாத அளவிற்கு பாதுகாப்பாக கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக படகில் உள்ள மீன் பிடி உபகரண பொருட்களையும் இடுப்பளவு நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது கடல் நீர் உப்புகாமல் தடுக்க நிரந்தரமாக தடுப்பு அணை அமைத்து, பாலம் அமைத்து தரவேண்டும் விழுந்தமாவடி மீனவ காலனி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.