தேனி மாவட்டத்தில் மே 13-ந்தேதி மக்கள் நீதிமன்றம்
- தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணை க்குழு சார்பில் மே 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.
- பொது மக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணை க்குழு சார்பில் மே 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.
தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, உத்தம பாளையம் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு குறித்த வழக்குகள், சொத்து, பணம் சம்மந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவானாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழி லாளர் நலன் இழப்பீடு வழக்குகள், குடும்ப வன்முறை தடுப்புச்சட்ட வழக்குகள், காசோலை நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள், இதர பொதுப்பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பொது மக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரை வாகவும், சுமூகமாகவும் முடித்து கொள்ளலாம் என்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய்பாபா அறிவித்துள்ளார்.