பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
- பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
- 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்
பெரம்பலூர்,
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நாட்டு நலபணித்திட்ட மாணவர்களின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.முகாமை ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது,தானத்தில் சிறந்தது இரத்த தானமெனவும், இப்போதுள்ள இளைஞர்கள் தங்களின் குருதியை தானம் செய்வதன் மூலம் அவர்களின் கொடையுள்ளம் பெருகும், மற்றும் உடலிலுள்ள இரத்த அணுக்கள் மீண்டும் உற்பத்தியாகும். எனவே அனைவரும் தகுந்த இடைவெளியில் குருதி தானம் செய்ய வலியுறுத்தினார்.முன்னதாக துவக்க முகாமில் கல்லூரி நிறுவங்களின் செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார் இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். கல்லூரி முதல்வர் மாரிமுத்து பேராசிரியர்கள், பேராசிரியைகள் முகாம் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.