- மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
- இயற்கையை நேசிக்க உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட வனத்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த உலக வன நாள் விழாவிறகு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், " ஐக்கிய நாடுகளின் சபையில் மார்ச் 21 ஆம் நாள் உலக வன நாள் விழாவாக கொண்டடாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் உலக வனநாளை கொண்டாடி வருகின்றோம். காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக இருக்கின்றது. அதற்கு நாம் செய்ய வேண்டியது காடுகளை பாதுகாக்க வேண்டும். காடு செழித்தால் நாடு செழிக்கும். காடுகளை பாதுகாப்போம், வெப்பம் தணிப்போம், இயற்கையை நேசிப்போம் என நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்" என தெரிவித்தார்.சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்துகொண்டு பேசுகையில், மாணவ, மாணவிகளிடம் " வன வளத்தை நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்கவும் அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்பத்துவதற்காகதான் உலக வன நாளை நாம் கொண்டாடுகின்றோம். மனித வாழ்விற்கு தேவையான பல பொருட்களை வழங்கக்கூடிய இடம் தான் வனம். வனங்கள் தான் நம் வாழ்வாதாரத்திற்கு தேவையான தூய்மையான நீரையும் தூய காற்றையும் தருகின்றது. அது மட்டுமின்றி நமது அன்றாடத் தேவைகளான விறகு. விலங்குகளுக்கு தேவையான தீவனம். மருத்துவ மூலிகைகளையும் அள்ளித் தரும் பொக்கிஷம். இந்த நன்னாளில் நாம் வனங்கள் நமக்கு தரும் நன்மைகளை மனதில் வைத்து வனவளத்தை பேணி பாதுகாப்போம் என உறுதி மொழி ஏற்போம்." என தெரிவித்தார். தொடர்ந்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ் ஆகியோரும் பேசினர்.பின்னர் மரக்கன்று நடும் விழா நடந்தது. முன்னதாக உலக வன நாளையொட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த வன நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வன அலுவலர் குகனேஷ், எஸ்பி ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் கற்பகம் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்நிகழ்ச்சியில் வனச்சரகர் பழனிகுமரன், சீனிவாசன் கலைக்கல்லூரி முதல்வர் வெற்றிவேலன், கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி, வேளாண் கல்லூரி முதல்வர் சாந்தாகோவிந்த, உட்பட பலர் கலந்து கொண்டனர்.