பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணி
- பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியினை நகராட்சி தலைவர் அம்பிகா தொடங்கிவைத்தார். ஆணையர் ராமர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு மேற்பார்வையில் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோர் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மேலும் நகராட்சி அனைத்து வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதேபோல் மத்திய அரசின் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் வாருங்கள் ஒன்றிணைவோம் என்ற நிகழ்ச்சியின் கீழ் நடந்த தூய்மை பணியினை பள்ளி முதல்வர் மேகநாதன் தொடங்கிவைத்தார். பள்ளி வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கேந்திரிய ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் மேற்பார்வையில் மாணவ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இணைந்து திருக்கோவிலில் அனைத்து சன்னதிகளும் சுத்தப்படுத்தி தண்ணீரால் கழுவி விடப்பட்டு உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாள் நடராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உட்பட பலர்கலந்துகொண்டனர்.