உள்ளூர் செய்திகள்

ரூ.11 கோடி செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள்

Published On 2023-08-14 06:44 GMT   |   Update On 2023-08-14 06:44 GMT
  • வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.11 கோடி செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது
  • போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஜெமின் பேரையூர், சாத்தனூர், கொளக்காநத்தம், ஆகியகிராமங்களுக்கு உயர்மட்ட மேம்பாலம், தார்சாலை மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுதல் ஆகிய பணிகளைதுவக்கி வைத்தும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரம்பியம், பெரியம்மாபாளையம், குன்னம், சின்னவெண்மணி, பெரிய வெண்மணி, கொத்தவாசல், நல்லறிக்கை, காடூர் மற்றும் புதுவேட்டக்குடி ஆகிய கிராமங்களில் ஏரி,குளம் தூர்வாருதல், தார் சாலைகள் அமைத்தல் ஆகிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கர்பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வேப்பூர் ஊராட்சிஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜெமின்பேரையூர் முதல் அருணகிரிமங்கலம் இடையே கிராம சாலை திட்டத்தின் கீழ்மருதையாற்றின் குறுக்கே ரூ.7கோடியே 25 லட்சம் செலவில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணியினையும், கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாத்தனூர் முதல் கொட்டறை வரை ரூ.91 லட்சம் செலவில் தார் சாலைஅமைக்கும் பணியினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.39 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினையும்.அதனை தொடர்ந்து வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கரம்பியம் ஊராட்சியில் உள்ள சின்ன ஏரியில் ரூ.8 லட்சத்து 28ஆயிரம் செலவில் ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் படித்துரை அமைக்கும் பணியினையும், பெரியம்மாபாளையம் ஊராட்சியில்கிராம நிர்வாக அலுவலகம் உள்ள தெருவில் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும்பணியினையும், பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.3 லட்சம் செலவில் சைக்கிள் நிறுத்தும்கொட்டகை அமைக்கும் பணியினையும், பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.லட்சத்து 90ஆயிரம் செலவில் மாணவர்களுக்கான கழிவறை அமைக்கும் பணியினையும், ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி உள்பட ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களில் மொத்தம் 11 கோடியே 69லட்சத்து 69 ஆயிரம் செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

அரியலூர் முதல் திட்டக்குடி வழித்தடத்தில் புதுவேட்டக்குடியிலிருந்து 2.கி.மீ தொலைவில் உள்ள காடூர் கிராமத்தினைதொட்டு செல்லும் வகையில் நகரப் பேருந்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கர் துவக்கிவைத்தார். பின்னர் மக்களோடு மக்களாக மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேருந்தில்பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News