பள்ளி விடுதியில் பெண் ஊழியர் தற்கொலை
- பெரம்பலூரில் காதலன் ஏமாற்றியதால் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்
- போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின
பெரம்பலூர்,
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அலுவலக உதவியா ளராகவும், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பா ளராகவும் பணிபுரிந்து வந் தார்.
பள்ளியில் நடந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரை மதியத்திற்கு பிறகு காண வில்லை.
இந்த நிலையில் பள்ளியில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர், விடு தியை சுத்தம் செய்வதற் காக கதவை திறந்து பார்த்தபோது, சுபா ஆடலரசி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.இது குறித்து தகவல் அறி ந்த பெரம்பலூர் போலீ சார் அங்கு சென்று சுபா ஆடல ரசியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்ப ற்றினர்.
அதில், என் சாவுக்கு யாரும் காரணமில்லை. தீராத மன உளைச்சல் காரணமாகவும், உடல் நிலை சரியில்லாத காரணத்தி னாலும், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்று சுபா ஆடலரசி கைப்பட எழுதி, தேதியிட்டு கையொப்பமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் ஆடலரசி தற்கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆடலரசி விழுப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற போது தனது காதலன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்தார். காதலன் தன்னை ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.