உள்ளூர் செய்திகள் (District)

வேலைவாய்ப்பு முகாமில் 287 பேருக்கு பணி நியமனம்

Published On 2023-09-10 08:25 GMT   |   Update On 2023-09-10 08:25 GMT
  • பெரம்பலூர் வேலைவாய்ப்பு முகாமில் 287 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
  • 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்முக தேர்வு நடத்தின

பெரம்பலூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ரோவர் கல்வி குழுமங்கள் ஆகியவற்றின் சார்பில் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றும் விரைவில் தொடங்கப்படவுள்ள முன்னணி தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான ஆட்களை நேர்முக தேர்வு உள்ளிட்டவைகளை நடத்தி தோ்வு செய்தனர். இதில் வேலை நாடுனர்கள் மொத்தம் 2 ஆயிரத்து 147 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதில் தேர்வான 287 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் அருணாச்சலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News