உள்ளூர் செய்திகள் (District)

எம்.பி. தேர்தலில் தனித்து போட்டி - சீமான்

Published On 2023-09-26 08:37 GMT   |   Update On 2023-09-26 08:37 GMT
  • வரும் எம்பி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்
  • பெண்களுக்கு இருபது தொகுதி, ஆண்களுக்கு 20 தொகுதி ஒதுக்கி இந்த தேர்தலை சந்திப்போம் என்று உறுதி

பெரம்பலூர்,

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் கூறும்போது,

நீண்ட காலமாக காவிரி தண்ணீரை தர கர்நாடகா மறுத்து வருகின்றனர். முதல்வர் சீத்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் அந்த மண்ணின் மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பது போல் உங்களுக்கு வாக்கு செலுத்திய மக்களுக்கு திமுக ஏன் உண்மையாக இருக்கக் கூடாது.

காவிரி நதிநீர் உரிமை, முல்லை பெரியார் நதி பிரச்சினை, நீட் தேர்வு, கச்சத்தீவு பிரச்சினை என்று அனைத்திற்கும் உச்சநீதிமன்றம் சென்று தான் தீர்வை பெறவேண்டும் என்றால் என்றால், இந்த நாட்டை நிர்வகிப்பது நீதிபதிகளா? சட்டமன்றம் , பாராளுமன்றம் எதற்கு? தி.மு.க. காங்கிரஸ் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் நாங்கள் வரவேற்போம். உலக மயம், தனியார் மயம், தாராள மயம், என்பதுதான் பாஜக, காங்கிரஸ் கொள்கை.

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராய் இருக்கிறது. வரும் எம்பி தேர்தலில் யாருடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடு கிறோம். பெண்களுக்கு இருபது தொகுதி, ஆண்க ளுக்கு 20 தொகுதி ஒதுக்கி இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக இல்லாத ஒரு அமைப்பு எங்களோடு வருமானால் அது குறித்து யோசிப்போம், இப்போது அதற்கு சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News