அரிசி அரவை ஆலைகளில் போலீசார் சோதனை
- பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி அரவை ஆலைகளில் போலீசார் சோதனை
- ரேஷன் அரிசியை மாவாக அரைத்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை எஸ்பி சுஜாதா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன், ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் அகரம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், புதுக்குறிச்சி, தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசி அரவை ஆலை மற்றும் மாவு மில்களில் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் அரவை ஆலைகள் மற்றும் மாவு மில்களில், கால்நடைக்கு உணவாகவோ, பிற வர்த்தக நோக்கங்களுக்காக ரேசன் அரிசியை மாவாக அரைத்தோ அல்லது குருணையாக உடைத்தோ கொடுக்கப்படுவது தண்டனைக்குறிய குற்றமாகும். இது தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டால் கடுமையான சட்டப்பூர்வ நடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற குற்றச் செயல்கள் குறித்து பொதுமக்கள் எங்களுக்கு தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.