உள்ளூர் செய்திகள்

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள்

Published On 2022-12-24 07:33 GMT   |   Update On 2022-12-24 07:33 GMT
  • வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
  • போக்குவரத்துத்துறை அமைச்சர்

பெரம்பலுார்:பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் துவக்கி வைத்தார்.மாநில அரசு நிதியுதவியின்கீழ், தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையுள்ள 5 கி.மீ நீளமுள்ள மண் சாலையினை தரம் உயர்த்தி ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும், பரவாய் முதல் வரகூர் வரையுள்ள 4.5 கி.மீ நீளமுள்ள மெட்டல் சாலையினை தரம் உயர்த்தி ரூ.10.9 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும்,அந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.13.79 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணியினையும், வரகூர் ஊராட்சி வடக்கு தெருவில் ரூ.10.57 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சி தெற்கு தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.14.32 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சியில் வரகூர் முதல் கொளப்பாடி வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், பரவாய் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியினையும், சின்னபரவாயில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.32 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, கள்ளம்புதூர், ஆண்டிகுரும்பலூர் கிராமங்களில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லபிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்துச்செல்வி மதியழகன், மாநில ஆதிதிராவிட துணைசெயலாளர் துரைசாமி, வேப்பூர் தெற்கு ஒன்றியசெயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .சிவசங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் .கருணாநிதி, .பாஸ்கர், நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் வடிவேல் (திருச்சி), உதவி கோட்ட பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் ஹரிகிருஷ்ணன் (பெரம்பலூர்), குன்னம் வட்டாட்சியர் அனிதா,வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சின்னபையன், செல்வகுமார், ஒன்றிய பொறியாளர் .ஆனந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News