வருகிற 27-ந்தேதி பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து போராட்டம்
- சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம்.
- பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடவும் போராட்டம் நடத்தப்படும்.
பரமத்தி வேலூர்:
பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்து இருப்பதாவது-
சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரியும் வருகிற 27-ம்தேதி மாலை 4 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கபட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேர்வுத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு, வாயில் முழக்கப் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்துவது எனவும் ஆசிரி யர் சங்கங்கள் முடிவு செய்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒருங்கி ணைப்பாளரை உடனடியாக மாற்றிடவும், நிரந்தர பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நியமனங்கள் செய்திடவும், பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடவும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.