உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.

பாபநாச சுவாமி கோவிலில் இரும்பு கதவு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2023-06-16 09:28 GMT   |   Update On 2023-06-16 09:28 GMT
  • இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
  • மேற்குரத வீதியில் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன.

நெல்லை:

பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோவிலில் மேற்கு ரத வீதியில் உள்ள ஆன்மீக மண்டபங்களில் வழிபாடு நடத்த தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் மேற்கு ரத வீதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இந்த பகுதியில் விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் நடைபாதை கடைகள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு விக்கிரமசிங்கபுரம் ஊர் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த இரும்பு கதவு அமைக்கும் பணியை ரத்து செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விக்ரமசிங்கப்புரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மனு சென்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் ஊர் பொதுமக்கள் சார்பாக 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாபநாச சுவாமி கோவிலின் மேற்கு ரத வீதியை பல நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். திடீரென நிர்வாக காரணங்கள் கூறி இந்து அறநிலையத்துறை இரும்பு கதவு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

23 சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் கோவிலின் பூஜைகள் தவறாமல் செய்து வந்தும், கோவிலை தூய்மையாகவும் பராமரித்து வருகிறோம். மேற்குரத வீதியில் இரும்பு கதவு பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதனை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

இவர் அந்த மனுவில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விக்கிர மசிங்கபுரம் பொதுமக்கள் கூறியதாவது:

மேற்குரத வீதியில் 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. தினசரி இந்த வீதி வழியாக இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. திடீரென இரும்பு கதவு அமைப்பதில் உள்நோக்கம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக அவர்கள் கொண்டு வந்த பாதாகைளை கலெக்டர் அலுவலக்திற்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அவற்றை பறிமுதல் செய்தனர்.



போலீசார் பறிமுதல் செய்த பதாகைகள்.


 


Tags:    

Similar News